புதிய அரசுடன் ஸ்ரீ.மு.காங்கிரஸ் இணைவது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது – ஹக்கீம் மறுப்பு..

புதிய அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று(07) இணைவதாக பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ள கருத்தை குறித்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.

நேற்று(06)இரவு தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்து கொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் இக்கூற்றை மறுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

அதேவேளை, புதிய அரசாங்கத்தின் இணைவதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறிய கருத்தை தான் மறுப்பதாக ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.