கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு…

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய அஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பு ஒன்று இன்று(07) மாலை 03.00 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று மாலை 03.00 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நேற்று(06) மாலை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்போது, எதிர்வரும் 14ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அது குறித்து கலந்துரையாட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.