நேவி சம்பத் என்றழைக்கப்படும் முன்னாள் லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சியை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.
வௌ்ளை வேனை பயன்படுத்தி கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பான வழக்கின் 10 ஆவது சந்தேக நபராக முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி கைது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.