“சதிகளை முறியடித்து ஜனநாயகத்திற்கான மக்கள் சக்தி” எனும் தொனியில் மக்கள் விடுதலை முன்னணியானது (ஜேவிபி)எதிர்வரும் 09ம் திகதி பிரதான நான்கு நகரங்களை மையமாகக் கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் மாநாடு நடைபெறவுள்ளதாக குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மாத்தறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களது தலைமையில் நடைபெற நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் மாத்தறை நகரிலும், கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இரத்தினபுரி நகரிலும், கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் லால் காந்த தலைமையில் கண்டியிலும், கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினரான விஜித ஹேரத் தலைமையில் அநுராதபுர நகரிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(09) மாலை 03.00 மணிக்கு குறித்த எதிர்ப்புப் பேரணி மற்றும் மாநாடு நடைபெறவுள்ளதாகவும் குறித்த கட்சி தெரிவித்துள்ளது.