மகளிர் உலக கிண்ண 20 இருபது தொடரில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி…

மகளிர் உலக கிண்ண 20 இருபது தொடரின் 11 ஆவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை மேற்கிந்திய தீவுகளின் குரோஸ் ஐஸ்லட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசகிக்காத நிலையில் ஷஷிகளா ஸ்ரீவர்தன பெற்றுக்கொடுத்த 31 அதிகபட்ச ஓட்டங்களுடன் 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை மகளிர் அணி 97 ஓட்டங்களை பெற்று 07 விக்கட்டுக்களை இழந்தது.

பந்து வீச்சில் பங்களாதேஷ் மகளிர் அணி சார்பில் ஜஹானாரா ஆலம் 03 விக்கட்டுக்களையும் மேலும் குப்ரா ருமானா பாஹிமா ஆகிய வீராங்கனைகள் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்.
98 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சுல்தானா 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் அணித்தலைவி சமரி அத்தப்பத்து 03 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் இலங்கை மகளிர் அணி புள்ளிபட்டியலில் முன்னேறியுள்ள அதேவேளை தொடரின் 17 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடன் குரோஸ் ஐஸ்லட் மைதானத்தில் போட்டியிடவுள்ளது.