கஜா புயல் – சில புகையிரத சேவைகள் இரத்து…

கஜா புயல் இன்று(15) மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், புகையிரத சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இயங்கக்கூடிய பயணிகள் புகையிரதங்கள் இன்று முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளன.