ஒரு கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுவலை பிரதேசத்தில் கார் ஒன்றில் அவற்றை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
சுமார் ஒரு கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப் பொருளின் பெறுமதி சுமார் 12.6 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.