இலங்கை இராணுவத்தின் தகவல் , தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு இலங்கை இராணுவத்தின் சமிக்ஞைப் படைபிரிவினது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கண்காட்சியில் இராணுவத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தனியார் துறையின் கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மற்றும் அதிநவீன இலத்திரணியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
‘மின்வெளி’ எதிர்காலத்திற்கான இடைக்கால போர்முனை’ எனும் கருப்பொருளில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் , இந்தியா, சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் மற்றும் ஏனைய பல நாடுகளில் இருந்து வருகை தரும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தகவல் தொழிநுட்ப நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.