பாராளுமன்றதிற்கு விசேட பாதுகாப்பு..

பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இன்று(16) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அமைதியற்ற நிலைமைகள் தோன்றுவதினை தடுக்கவே குறித்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

நேற்று(15) மற்றும் நேற்று முன்தினம்(14) பாராளுமன்ற மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர், கலகம் அடக்கும் பொலிசார் ஆகியோர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமனறம் இன்று(16) மதியம் 01.30 மணியளவில் கூடவுள்ளது.