நாலக டி சில்வா தேசிய வைத்தியசாலைக்கு…

பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் விசாரணை பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா வைத்திய பரிசோதனைகளுக்காக விசேட பாதுகாப்புக்களுக்கு மத்தியில் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாலக டி சில்வா இருத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரிசோதனைகளை முன்வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய நாலக டி சில்வா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலைச் சதியில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.