ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை கோரியுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பிரதமர் அலுவலகம் இன்று(19) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மஹிந்தவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கோரப்படவில்லையென்றும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
