பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் இன்று(21) பெயரிடுகிறது…

பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் இன்று(21) தமது பிரதிநிதிகளை பெயரிடப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியொன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியோர் இன்று(21) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், வியாழக் கிழமை(22) பௌர்ணமி தினம் என்பதனால், இன்று(21) தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுவது கட்டாயமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக சபாநாயகர் உட்பட 12 பேர் பெயரிடப்படவுள்ளனர்.

இந்தத் தெரிவுக்குழுவின் ஊடாக ஏனைய அனைத்து தெரிவுக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.