பூண்டானது முகப்பருக்கள், அரிப்புகள், வீக்கம், முக சுருக்கங்கள், அழுக்குகள் ஆகிய பிரச்சினைகளுக்கு விடை தருகிறது.
பருக்களை ஒழிக்க:
முகத்தின் அழகை சீர் குலைக்கும் முக்கிய பங்கு இந்த பருக்களுக்கு உள்ளது. இவற்றை நீக்க ஒரு எளிய வைத்தியம் தான் இது.
தேவையானவை:
பூண்டு 2 பல்
தேன் 1 ஸ்பூன்
செய்முறை :- முதலில் பூண்டை பாதியாக அரிந்து ஒரு பகுதியை மட்டும் தேனில் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவவும். இவ்வாறு பருக்கள் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் மென்மையாக தடவி வந்தால் பருக்கள் ஓடியே போய் விடும். மேலும், இவை முகத்தில் உள்ள கிருமிகளையும் அழிக்க வல்லது.
என்றும் இளமையாக இருக்க:
முகம் என்றுமே பார்க்க இளமையாக இருக்க வேண்டும் என்றால் முதலில் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க வேண்டும். இதற்கு இந்த டிப்ஸ் போதுமே.
தேவையானவை:
பூண்டு 2 பல்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை :- பூண்டை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். அடுத்து இதனை தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து காலையில் சாப்பிட்டால் முகத்தின் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் தரும். முகத்தில் உள்ள கருமைகளையும் இந்த டிப்ஸ் போக்க வல்லது. மேலும், உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் இது வெளியேற்றிவிடும்.