சவூதி உடன் இராஜதந்திர உறவுகளை, வலுப்படுத்துகிறது அமெரிக்கா…

சவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில், சவுதி அரசு மீதான சர்வதேச கண்டணங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவினால் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா தமது உறுதியான பங்குதாரர் எனவும் அது அமெரிக்காவில் பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.