தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் வீதியில் இன்று(24) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூண்டுலோயா பிரதான வீதியில் மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு பூண்டுலோயா பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.