குருநாகல் நீர்கொழும்பு வீதியில் இன்று(24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் வந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.