நாட்டின் தென்மேல் மற்றும் வடமேல் பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ விருத்தியடைந்து மாலையில் அல்லது இரவில் வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் பரவக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில், குறிப்பாக மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்