மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் நேற்று(24) ஹட்டன் பகுதியில் வைத்து தடம் புரண்டமைக்கு பிறகு இன்று(25) காலை மீண்டும் வழமைக்கு திரும்பி இருந்தது.

பின்னர் குறித்த புகையிரதம் மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளையில், காலை 8 மணி அளவில் ஹட்டன் மற்றும் ரொசல்ல பகுதிகளுக்கு இடைப்பட்ட 67ம் இலக்க தூன் பகுதியில் மீண்டும் தடம் புரண்டுள்ளமையினால் மலையகத்திற்கான புகையிரத சேவை இன்று(25) காலையில் இருந்து மீண்டும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மலையகத்திற்கான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பலாம் எனவும் புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.