மாத்தறை, பாடசாலை மாணவன் கொலை தொடர்பில் முக்கிய ஆதாரம் சிக்கியது…

மாத்தறை – எலவில்ல வீதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கத்தி குத்து சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களாக தேடப்பட்டு வரும் மூன்று மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளானது, மாத்தறை நகருக்கு அருகில் கண்டுபிடித்துள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த சம்பவத்தில் கத்து குத்துக்கு இலக்காகி உயிரிழந்த மாணவனது பிரேத பரிசோதனைகள் இன்று(25) மாத்தறை வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.