சீனாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 6.6 சதவீதத்தால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் அதன் வளர்ச்சி 2019 ஆம் ஆண்டில் மந்த நிலையை அடையலாம் என பீஜிங் ரெனிமின் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய 6.6% பொருளாதார வளர்ச்சி 2019 ஆம் ஆண்டில் 6.3% ஆக குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக அமைப்பு ரீதியான மேம்பாடு, வர்த்தகம் காரணமாகவே இந்நிலை ஏற்படுவதற்கான ஏதுநிலை உள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவுடன் சீனா கொண்டுள்ள பொருளாதார பதற்ற நிலை காரணமாக கடந்த மாதம் வர்த்தக நடவடிக்கைகளில் பின்டைவை சீனா எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.