ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி…

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.