மாத்தறை மாணவன் படுகொலை சம்பவம் – மூன்றாவது சந்தேக நபரும் சரண்…

மாத்தறை – எலவெல்ல பகுதியில் மேலதிக வகுப்பு ஒன்றிற்கு அருகாமையில் கூரிய ஆயுதத்தால் பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்றாவது மாணவரும் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடாக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை – வல்கம பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவர் என தெரியவந்துள்ளது.

மாணவரின் கொலையின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நீதிமன்றில் சரணடைந்த பிரதான சந்தேகத்துக்குரிய மாணவன், எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸில் சரணடைந்த மாணவர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்படுகிறது.