பாராளுமன்றம் இன்று(27) கூடுகிறது…

பாராளுமன்றம் இன்று(27) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இதேவேளை, இன்றும் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட அதிதிகளுக்காக பார்வையாளர் கூடம் ஆகியன மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இதுவலை தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று காலை கூடவுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில், இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.