திகன வன்முறை சம்பவத்தின் போது தவறிழைத்து விட்டோம் -FB..

திகன வன்முறைச் சம்பவம் தொடர்பில் பாரிய தவறிழைத்து விட்டதாக உலகின் முதனிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன், லண்டனில் இடம்பெற்ற விசாரணை ஒன்றின் போது இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்..

கேள்விசிங்களத்தில் வெளியான குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளினால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த முகநூல் பதிவுகள், நிறுவனத்தின் நியதிகளுக்கு புறம்பானது அல்லவா?

பதில்இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளை நீக்காமை ஓர் பாரதூரமான பிழையாகும்.

கேள்வி – இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த முகநூல் பதிவுகள் பிரசூரிக்கப்பட்டிருந்தது. இதனால் உயிர்ச் சேதங்களும் உடமைச் சேதங்களும் ஏற்பட்டது. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியது. முகநூல் பதிவுகள் இந்த முரண்பாட்டு நிலைமையை தூண்டி பூதாகரமாக்கியது என்பதனை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா?

பதில்இந்த முகநூல் பதிவுகளை நீக்குமாறு இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் கோரிய போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் முகநூல் பணியாளர் ஒருவரின் கவனயீனமே..

கேள்விசமூக விரோத அடிப்படையிலான பதிவுகள் கிடையாது என முன்னதாக முகநூல் நிறுவனம் வாதிட்டதாகவும் அதனை ஒப்புக் கொள்கின்றீர்களா?

பதில்இல்லை அதனை ஒப்புக்கொள்ளவில்லை தவறுதலாக இவ்வாறு ஒர் பிழை இடம்பெற்றது.

கேள்விமுகநூல் நிறுவனத்தை நம்ப முடியாது எனவும் சரியான மதிப்பீடுகளை முகநூல் நிறுவனத்தை வைத்து பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா?

பதில்நிறுவனம் பாரதூரமான பிழையொன்றை விட்டுள்ளதாக ஒப்புக் கொள்கிறோம். இவ்வாறான பிழைகளை வரையறுத்துக் கொள்வதே தமது நிறுவனத்தின் பொறுப்பு. சகல மொழிகளிலும் குரோத உணர்வைத் தூண்டும் வார்த்தைகளை கண்டறிந்து அதனை தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்காக பாரியளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.