பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
++++++++(<+++++++++ Update
11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் காரணங்களை முன்வைக்க இன்று(28) கோட்டை நீதிவான் நீதிமன்ற முன்னிலையில் தான் முன்னிலையாக உள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இவரை நேற்று(27) வாக்குமூலம் அளிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சமூகவளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.