இந்தியா, சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் #metoo…

இந்தியா, சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் மீடூ (#metoo) இயக்கம் பரவி வரும் நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ‘மீடூ’ ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் மோசமான அனுபவங்களை இந்த ஹேஷ்டேக் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த இயக்கம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருந்த பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டன.