பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு..

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்க, குறித்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஆமொதித்து வழிமொழிந்தார்.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.