அமைச்சுக்களினது செயலாளர்களை நியமித்திருப்பது தொடர்பில் சிக்கல் இல்லை…

அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களை நியமித்திருப்பது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்பவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த அனைத்து நியமனங்களும் சட்டபூர்வமானது என்பதுடன், அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் எத்தகைய அரசியல் நிலைமைகள் ஏற்பட்டாலும் தமது அமைச்சுக்களின் நடவடிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றி, நாட்டின் அனைத்து துறைகளையும் உரிய முறையில் பேணுவது அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.

சுமார் 27,000 சமுர்த்தி அதிகாரிகளின் வாழ்க்கை எதிர்பார்ப்பான முழுமையான ஓய்வூதியத்துடன், கூடிய நியமனக் கனவை நனவாக்கும் வகையில் சுமார் 7,000 பேருக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்பட்ட போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.