ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்கும் உத்தரவை ஜனாதிபதி கடந்த மாதம் விடுத்திருந்தார் எனினும், குறித்த உத்தரவை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவார் இதன் மூலம் தனது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதை தவிர்த்துக் கொள்வார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்தை கலைத்தது அரசமைப்பிற்கு முரணான செயல் என நீதிமன்றம் தெரிவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.