வைர கல் கொள்ளை – “மாத்தறை மல்லி” கைது…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பன்னிப்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மாணிக்ககல் மற்றும் வைர கல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய குறித்த நபர் மாத்தறை மல்லி என்று அடையாளப்படுத்தப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த சந்தேக நபர் ரத்மாலானையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.