கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடிய சந்தர்ப்பத்திலேயே அமெரிக்க வான் தாக்குதலுக்கு பலியாகியமை குறித்து வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனக்கு முழுமையான அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாரும் பொலிஸ் தலைமையகத்திடம் கோரியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இது குறித்து பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குறித்த பயங்கரவாத நபரினது கலேவெல மற்றும் கொழும்பில் வசித்து வரும் உறவினர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரானது ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புடைய முதல் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(riz)