பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இன்று(03) மீண்டும் இடம்பெறவுள்ளன.

குறித்த மனு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட்டது.