அம்பலாங்கொடை பகுதியில் இரு இளைஞர்கள் கைது…

அம்பலாங்கொடை, வதுகெதர பகுதியில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வதுகெதர பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், மோட்டார் வாகனம், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மொரன்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.