முகத்துக்கு ஐஸ் கட்டி மட்டும் போதும் – மாற்றத்தை நீங்களே பாருங்க…

குறிப்பாக அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சருமப் பராமரிப்புகளில், மிகவும் மலிவான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் இந்த ஐஸ் கட்டி.

கண் வீக்கம் உடனே குறைய:
ஐஸ் கட்டிகளை சாதாரணமாக தண்ணீர் மட்டும் ஊற்றி ஐஸ் டிரேயில் வைக்கலாம். அதைவிட தண்ணீருடன் பால், க்ரீன் டீ போன்றவற்றைச் சேர்த்து ஐஸ் டிரேயில் வைக்கலாம்.

எப்படி அப்ளை செய்ய
பொதுவாக ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அப்ளை செய்து மசாஜ் செய்து சில நிமிடங்கள் உலர விட்டுப் பின் முகத்தை டவலால் துடைத்துக் கொள்ளுங்கள்

பருக்கள் குறைய:
பருக்கள் உள்ள சருமத்தில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தும் போது, முதலில் முகத்தை நன்கு கழுவி விட்டு ஈரமில்லாமல் முகத்தைத் துடைத்துவிட வேண்டும். பின்னர் ஒரு பிளாஸ்டிக் கவரால் ஐஸ் கட்டியை நன்கு சுற்றிக் கொள்ளுங்கள். அதை முகப்பருக்கள் உள்ள இடத்தில் வைத்து ஒற்றி எடுங்கள். அதன்பின் அப்படியே ஐந்து நிமிடங்கள் வரை உலர விடுங்கள். நீங்கள் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் பயன்படுத்துபவராக இருந்தால் அந்த ஆயிலை ஒரு சில துளிகள் ஐஸ் கட்டியில் விட்டு பின், ஐஸ் கட்டியை துணியிலோ பிளாஸ்டிக் கவரிலோ சுற்றி பருக்களின் மேல் வைத்து மசாஜ் செய்யுங்கள்.

வயதாவதை தடுக்க:
குளிர்ந்த நீரால் நன்கு முகத்தைக் கழுவ வேண்டும். அதன்பின் ஈரமில்லாத டவலால் முகத்தை நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். அதன்பின், ஐஸ் கட்டிகளை எடுத்து முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவிடுங்கள். தொடர்ந்து ஐஸ் கட்டிகளை இவ்வாறு சருமத்தில் மசாஜ் செய்து வந்தால் மிக விரைவிலேயே நல்ல மாற்றத்தை உங்களால் பார்க்க முடியும்.

எண்ணெய் சருமத்தை சரிசெய்ய:
முகத்தை நன்கு கழுவி சுத்தமாகத் துடைத்துவிடுங்கள். அதன்பின் ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து நன்றாக சுற்றி முகத்தில் ரப் செய்யுங்கள். நன்றாக ஐஸ் கட்டியை சருமத்தில் ரப் செய்த பின்பு சிறிது நேரம் உலர விட்டு பின், முகத்தில் மாய்ச்சரைஸரை அப்ளை செய்யுங்கள். இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் புதினா இலைகளையோ அல்லது சாறையோ ஐஸ் டிரேயில் வைத்து ஐஸ் தயாரித்துப் பயன்படுத்துங்கள்.