ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு, வேறு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு நாளை(04) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கோ அல்லது வேறு கட்சிக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், இந்த மாநாட்டின் போது, தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கருத்து வெளியிடுவார் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.