வவுணதீவு பொலிஸ் அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது…

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸ் அலுவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது