அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 13ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு…

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற ‘அலி ரொஷான்’ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி மாதம் 13ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை விசாரிப்பதற்கு திகதி அறிவிக்குமாறும் அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.