எரிபொருள் விலை திருத்தத்துடன், பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில், பேரூந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவுக்கும் இடையில் இன்று(05) இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது, இணக்கப்பாடு எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஒருவாரத்தினுள் பேரூந்து சங்கங்களது யோசனைகள் மற்றும் கருத்துக்களை போக்குவரத்து ஆணைக்குழுவில் முன்வைக்குமாறும், அனைத்து யோசனைகளும் இம்மாதம் 21ம் திகதி பரிசீலனை செய்யப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.