அப்பிள் நிறுவனம் வெளியிடும் 11 ஸ்மார்ட்போன், ஐபேட் மாடல்கள்

நடப்பு ஆண்டில் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அப்பிள் நிறுவனம் எதிர்வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் 11 புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் மாடல்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவை பின்வருமாறு:

1. ஐபோன் 6 எஸ்

வரும் செப்டம்பர் மாதம் அப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் இருப்பது போன்ற போர்ஸ் டச் ஸ்கிரீனுடன் கூடிய ஐபோன் 6 எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளியாகிறது. தற்போதுள்ள ஐபோன்களில் உள்ள 8 மெகா பிக்சல் கேமராவில் உள்ள கலர் ஆப்சன்களை போல சற்று மேம்படுத்தப்பட்டு 12 மெகா பிக்சல் சென்சார் கேமராவுடன் வெளிவருகிறது.

2. மெகா சைஸ் ஐபோன்

ஐபோன் 6 எஸ்-ஐ விட பெரிய சைஸில் புதிய மாடல் ஒன்றை அப்பிள் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐபோன் 6 எஸ் பிளஸ் என பெயரிடப்படுகிறது.

3. மெகா சைஸ் ஐபேட்

வழக்கமாக அப்பிள் நிறுவனம் அக்டோபர் மாதம் புதிய ஐபேட் மாடல்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 12 இன்ச் அளவிற்கு பெரிய சைஸில் ஐபேட் கருவியை வெளியிட உள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னலில் தகவல் வெளியாகி இருக்கிறது.

4. ஐபேட் ஏர் மாடலில் புதிய வசதிகள்

ஏற்கனவே உள்ள பிளாக்சிப் 9.7 இன்ச் மாடலில் புதிய அப்டேட்கள் வெளியிடப்படுகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட புதிய பிராசசருடனும் வெளிவருகிறது.

5. ஐபேட் மினி

இந்த ஆண்டிற்குள் ஸ்லிம்மாகவும், எடை குறைவாகவும் அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி மாடலை வெளியிடுகிறது.

6. புதிய அப்பிள் டிவி

3 ஆண்டுகளாக தனது செட்டாப் பாக்ஸிற்கு புதிய வெர்ஷனை வெளியிடாத அப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அப்பிள் டிவியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. புதிய ஸ்டிரீமிங் டிவி சர்வீஸ் (கேபிள் சர்வீஸ்)

அதிகமான லோக்கல் சேனல்களுடன் புதிய கேபிள் சேவையை அப்பிள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. 21.5 இன்ச் ஸ்கிரீன் 4k ஐமேக்

4,096 x 2,304 ரெசல்யூசன்களை சப்போர்ட் செய்யும் அளவிற்கு புதிய ஐமேக் சாப்ட்வேர் வெளியிடப்படுகிறது.

9. புதிய அப்பிள் வாட்ச்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடலுடன் வெளியிட்டிருந்த அப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சில் தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. ஐ.ஓ.எஸ் 9 – இறுதி பதிப்பு வெளியீடு

ஐபோன், ஐபேட் கருவிகளுக்கான புதிய சாப்ட்வேர் அப்டேட்கள் வெளியிடப்படுகிறது. ஐ.ஓ.எஸ்.9 என அழைக்கப்படும் இந்த சாப்ட்வேரின் இறுதிப்பதிப்பாக ஸ்மார்ட்டர் சிரி, அப்பிள் மேப்களில் சற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள், மேம்படுத்தப்பட்ட அப்ஸ்களுடன் வெளிவருகிறது.

11. குட்டி ஐபோன்

4 இன்ச் ஸ்கிரீனில் குட்டி ஐபோனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஐபோன் 6 ஸி என பெயரிடப்பட்டுள்ளது. ஐபோன் 5 எஸ்-ஐ காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.