மேல் மாகாண சபையின் 2019 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்…

மேல் மாகாண சபையின் 2019 வரவு செலவுத் திட்டம் நேற்று(05) நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்திருந்தார்.

குறித்த வரவு செலவுத் திடட்டத்தில், அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாகாண வைத்தியசாலைகளுக்கான வசதிகள் மற்றும் மாகாண பாடசலைகளுக்காகவும் இம்முறை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேல் மாகாண சபையின் குறித்த 31வது வரவு செலவுத்திட்டமானது, முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவினால் கடந்த 04ம் திகதி முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.