உயர் நீதிமன்ற வளாகத்தினை அண்டிய பகுதிகளுக்கு பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்ற வளாகத்தினை அண்டிய பகுதிகளது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.