கிளிநொச்சிக்கு இன்று(07) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடு குளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்ததோடு, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகனிடம் இரணைமடு குளத்தின் ஆவணத்தையும் கையளித்துள்ளார்.
மேலும் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் நிகழ்வையும் அரிசியிட்டு ஆரம்பித்து வைத்தார்.
இரணைமடு குளத்தின் தற்போதைய நீர் மட்டம் 36 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் ஒரு வான்கதவினை ஆறு இஞ்சி அளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்