பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் அவற்றை விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளர் யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய துலித் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் அனுமதி வழங்ப்பட்டுள்ளது.