வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் வைத்து நேற்று கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி கேரளா கஞ்சாவை விநியோகத்திற்காக முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திடீரென நடத்திய சோதனையின் போது சந்தேகநபர் ஒரு கிலோவும் 770 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.