கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று(08) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியைத் தாண்டியுள்ள நிலையில் இன்று காலை 14 வான்கதவுகளில் ஐந்து கதவுகள் 150 மில்லிமீற்றர் அளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் தாழ் நிலப்பகுதியில் எவ்வித பாரியளவிலான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும், தாம் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு நேற்று (07) கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.