நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை..

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. 

கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். .

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.