நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்…

மழையுடனான காலநிலை நிலவுகின்ற நிலையில், குளங்கள் மற்றும் ஆறுகளை பயன்படுத்தும்போது, அவதானமாக செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ நிலையம், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சுற்றுலா சென்று, பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த 6 மாதங்களில் மாத்திரம் நீரில் மூழ்கி 349 பேர் உயிரிழந்துள்ளதுடன்,இவர்களுள் 58 பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.