ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்கும் யோசனைக்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பறிபோன ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவது அவசியமாகும். அதேபோன்று, நீக்கப்பட்ட சட்ட ரீதியிலான அமைச்சரவையை மீண்டும் செயற்படச் செய்வது அவசியமாகும் எனவும் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை நிரூபிக்கும் வகையிலான பிரேரணை பாராளுமன்றத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.