இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு…

காலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் இன்று(10) அதிகாலை பேரூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அஹங்கம பகுதியை சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.