பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் பேருவளை மற்றும் பலப்பிட்டியவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகையானது, இலங்கையினுள் பங்கிடுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கொண்டு வரபட்ட ஹெரோயின் 231Kg ஆனது ஹெரோயின் 400Kg இனது ஒரு பங்கு எனவும், அதன் எஞ்சிய 169Kg ஹெரோயின் அளவானது விற்பனையாளர்களால் சீஷெல்ஸ் நாட்டுக்கு மற்றும் துபாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கைதாகிய சந்தேக நபர்கள் வழங்கிய வாக்கு மூலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

குறித்த ஹெரோயின் கடத்தலில் நான்கு சந்தேக நபர்கள் கைதாகி உள்ளதோடு, இதனோடு அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பெறுமதி 2278 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.